தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக TNTJ, புதுக்கோட்டை மாவட்ட, ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை), 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு...
மாவட்டச் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் 31.12.2024 செவ்வாய்க்கிழமையன்று, அறந்தாங்கி M.R. மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கு, மாவட்டத் தலைவர், H.சித்திக் ரகுமான்.,B.E., அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இதில்
TNTJ மாநிலத் துணைப் பொதுச் செயளாலர் மயிலை A.K.அப்துல் ரஹீம், TNTJ மாநிலச் செயலாளர் காரைக்கால் யூசுஃப் MISC, மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் S.ரபீக் ராஜா, துணைச் செயலாளர்கள் A.ஷேக் அப்துல்லாஹ் புதுகை மீரான், அப்துர் ரஹ்மான் ரஹுஃப், M.ஷேக் அப்துல்லாஹ், மருத்துவ அணிச் செயலாளர் சபியுபுல்லா மற்றும் மாணவரணிச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் MISC ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், TNTJ மாநிலத் துணைப் பொதுச் செயளாலர் மயிலை A.K.அப்துல் ரஹீம், TNTJ மாநிலச் செயலாளர் காரைக்கால் யூசுஃப் MISc மற்றும் TNTJ புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான்.,B.E., ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் மாவட்டம் முழுவதுமுள்ள, கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், மாவட்டத்தின் ஆண், பெண் பேச்சாளர்கள் மற்றும் ஜமாஅத்தின் செயல்வீரர்கள் & செயல்வீராங்கனைகள் என ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட ஏகத்துவ எழுச்சி மாநாடு
1. TNTJ மாநிலத் தலைமை அறிவித்த, அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை), 10 மாதகால செயல்திட்டத்தின் நிறைவாக, TNTJ புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 2025 பிப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை, அறந்தாங்கியில், நடைபெறும் ஏகத்துவ எழுச்சி மாநாட்டிற்கு மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணகான ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கணக்கானோர் கலந்து கொள்வது என இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு
2. அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் அப்பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்,
இப்பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு
கொடுக்கப்படும் கடும் தண்டனையும், மாணவ மாணவிகள் ஒழுக்க மாண்புகளை பேணி நடப்பதும்தான், இதை கருத்தில் கொண்டு ஆளும் திமுக அரசு
இது போன்று பெண்களுக்கெதிரான குற்றங்களை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறோம்
சாத்தான் சல்மான் ருஷ்டி
3. 1988 இல் சல்மான் ருஷ்டி எனும் சாக்கடையால் எழுதப்பட்ட்டு உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தி தடைசெய்யப்பட்டிருந்த சாத்தானின் கவிதைகள்
எனும் நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை டில்லி உயர்நீதி மன்றம் நீக்கியது, மத விமர்சனம் என்பதை தாண்டி ஆபாச அத்துமீறலில் ஈடுபட்ட சல்மான் ருஷ்டியின்
இப்புத்தகத்தை டில்லி அரசும், தமிழக அரசும் தத்தமது மாநிலங்களில் வெளியாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த இந்தக் கூட்டம்
வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
அமித்ஷாவின் அம்பேத்கர் வெறுப்பு
4. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமித்ஷாவின் பேச்சை
இந்தக் கூட்டம் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம் , மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் நடத்திய ஜன நாயக போராட்டங்களை முடக்கும் விதமாக மக்களவை எதிர்கட்சித்தலைவர்
ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் மீது பொய் வழக்கு தொடுத்திருப்பது பாசிச ஆட்சியின் உச்சம், இது போன்ற ஒன்றிய அரசின் எதேச்சாதிகார மனநிலையை இந்தக் கூட்டம் வாயிலாக
வன்மையாக கண்டிக்கிறோம்
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா
5. வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது, வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து
இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய மைனாரிடிட்டி பாஜக அரசை இந்த
கூட்டம் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். நீட்டிக்கப்பட்டுள்ள JPC இந்த மசோதாவை கைவிட பரிந்துரைக்க வேண்டும் என இந்த கூட்டம்
வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை)
6. திருமறைக்குர் ஆனில் மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று கூறப்பட்டுள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றையும் , வாழக்கை
செய்தியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வரும் பிப்ரவரி வரை 10 மாத கால தொடர்பிரச்சாரத்தை
மிகச்சிறப்பாக இறைவனின் அருளால் செய்வோம் என இந்த கூட்டம் வாயிலாக உறுதி ஏற்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.