மீமிசல் அருகே பெண்ணை கத்தியால் குத்திவிட்டு சங்கிலி பறிப்பு டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்




அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 36), லாரி டிரைவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே செய்யானம் கிராமத்தில் உள்ள வயல்களில் இருக்கும் வைக்கோல் கட்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் மனைவி பரமேஸ்வரி (25) கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை இளையராஜா பறிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம்போடவே ஆத்திரம் அடைந்த இளையராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையிலும், தலையிலும் சரமாரியாக குத்தி விட்டு தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் இளையராஜாவை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து மீமிசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments