பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக சென்னை தாம்பரம்- ராமேஸ்வரம் இடையே புதிய தினசரி ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி






பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக சென்னை தாம்பரம்- ராமேஸ்வரம் இடையே புதிய தினசரி ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது 

சென்னை தாம்பரம்- இராமேஸ்வரம் 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம்- இராமேஸ்வரம் இடையே தினசரி புதிய ரயில் சேவை அறிமுகமாகிறது!

தற்போது வெளியாகி உள்ள அட்டவணைப்படி இந்த ரயில் சேவை (ரயில் எண் 16103/16104) தினசரி இயங்கும் 

வண்டி எண் : 16103
சென்னை தாம்பரம் - இராமேஸ்வரம் 

தினசரி இந்த ரயில் ஆனது சென்னை தாம்பரத்தில் 
இருந்து மாலை 06.05க்கு புறப்பட்டு மறுநாள் காலை இராமேஸ்வரத்திற்கு காலை 5:45க்கும் வந்து சேரும்.

வண்டி எண் : 16104 இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் 

தினசரி பின்னர் மாலை 3..35 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு
மறுநாள் அதிகாலை 03.10 க்கும் சென்னை தாம்பரம் சென்றடையும்.

வழி:

சென்னை தாம்பரம் 
செங்கல்பட்டு 
விழுப்புரம் 
கடலூர் 
சிதம்பரம் 
மயிலாடுதுறை 
திருவாரூர் 
திருத்துறைப்பூண்டி 
பட்டுக்கோட்டை 
அறந்தாங்கி 
காரைக்குடி 
சிவகங்கை 
மானாமதுரை 
பரமக்குடி
இராமநாதபுரம் 

இந்த புதிய ரயில் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது

குறிப்பு 

சென்னை தாம்பரம் - திருவாரூர் இடையே எலக்ட்ரிக் லோகோ மூலம் இயக்கப்படும் 
 
திருவாரூர் - இராமேஸ்வரம் இடையே எலக்ட்ரிக் லோகோ மூலம் இயக்கப்படும்

18 பெட்டிகள் கொண்ட LHB பெட்டிகள் மூலம் இயக்கப்படும் 

பாம்பன் பாலம் திறப்பு விழா முதல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை தாம்பரத்தில் பராமரிப்பு நடைபெறுகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments