ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனா். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் வாகன சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயலும்போது பண்டல், பண்டல்களாக கஞ்சா சிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. சமீபத்தில் கடலில் 45 கிலோ கஞ்சா பண்டல்கள் மிதந்து வந்தன. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோட்டைப்பட்டினம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று மாலை மீமிசல் அருகே கோளேந்திர பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கஞ்சா பண்டல்கள்
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஒருவரையும், அவரை பின்தொடர்ந்து வந்த காரையும் போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். இதில் காரில் கஞ்சா பண்டல், பண்டலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பண்டல்கள் இருந்தன.
இதையடுத்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பழங்குளம் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (வயது 27) என்பதும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் பிரிட்டோ பிரபாகரன் (29) என்பதும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து காரில் இருந்து கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்து எடையிட்டனர். இதில் 100 கிலோ வரை கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த கஞ்சாவை மீமிசல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதைதொடர்ந்து ஆண்ட்ரூஸ், பிரிட்டோ பிரபாகரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதும், புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை வழியாக படகில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 2 போிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பண்டல்கள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.