மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் குரூப்- 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல்




புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் குரூப்-2, 2 ஏ முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான குரூப்-2, 2 ஏ போட்டி தேர்வுக்கான அறிவிப்பில் 828 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 22-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் குரூப்-2, 2 ஏ தேர்வுக்கான முதன்மைத்தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு கடந்த மாதம் (நவம்பர்) 18-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், நுழைவுச்சீட்டு நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கட்டணமில்லா பாடக்குறிப்புகள்

இந்த பயிற்சி வகுப்பில் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. வாராந்திர மாதிரி தேர்வுகளும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பாடக்குறிப்புகள் மற்றும் இணையவழி மாதிரிதேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

முதன்மைத்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments