கோபாலப்பட்டிணம் மதரஸாவில் பயிலும் மாணவிகளுக்கான இறுதித் தேர்வுகள், ஆண்டுவிழா மற்றும் மிஹ்ராஜ் தின சிறப்புத் தேங்காய் சோறு குறித்த முக்கிய அறிவிப்புகளை இன்று 27/12/2025 ஜமாஅத் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஆலிமா இறுதித் தேர்வு
பெண்கள் மதரஸாவில் மூன்றாம் ஆண்டு பயின்று, ஆலிமா பட்டம் பெறவிருக்கும் மாணவிகளுக்கான இறுதித் தேர்வு வரும் ஜனவரி 05-ம் தேதி நடைபெற உள்ளது.
மிஹ்ராஜ் தின சிறப்புத் தேங்காய் சோறு
வருகின்ற ஜனவரி 17-ம் தேதி மிஹ்ராஜ் தினத்தை முன்னிட்டு, ஊர் வழக்கப்படி தேங்காய் சோறு சமைத்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விலை ரூ. 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்தப் மற்றும் பெண்கள் மதரஸா ஆண்டுவிழா
மக்தப் மதரஸாவின் ஆண்டுவிழா மற்றும் பெண்கள் மதரஸாவின் 'ஆலிமா பட்டமளிப்பு விழா' ஆகிய இருபெரும் நிகழ்வுகள் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நமது ஊர் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 14-ம் தேதி பெண்கள் மதரஸாவில் பெண்களுக்கு மட்டுமேயான பிரத்யேக ஆண்டுவிழா நிகழ்வுகள் நடைபெற உள்ளன என ஜமாஅத் நிர்வாகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.