சர்ச்சை பேச்சு: காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி கறம்பக்குடியில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.



புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில், இஸ்லாமியர்கள் ரத்த தானம் செய்வது குறித்து அவதூறு பரப்பிய காவல் ஆய்வாளரை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் நேற்று (19.12.2025) எழுச்சிமிக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர், "முஸ்லிம்கள் எயிட்ஸ் நோயைப் பரப்புவதற்காகத்தான் ரத்த தானம் செய்கிறார்கள்" என்று உண்மைக்குப் புறம்பாகவும், திட்டமிட்ட மத வெறுப்புணர்வோடும் பேசியதாகக் கூறப்படுகிறது. அரசுப் பதவியில் உள்ள ஒரு அதிகாரி, பொதுமக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டம்
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, மாவட்டத் தலைவர் H.சித்தீக் ரகுமான் B.E. தலைமையில் கறம்பக்குடியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் TNTJ மாநிலச் செயலாளர் சபீர் அலி MISC கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரத்த தான சேவையில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். சென்னை பெருவெள்ளம், கொரோனா பேரிடர் காலங்களில் உயிரைப் பணயம் வைத்துச் சேவை செய்த இஸ்லாமியர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வகிக்கும் பதவிக்கே தகுதியற்றவர்.

முக்கிய கோரிக்கைகள்:
ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகத் தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
  • மதவெறுப்பைத் தூண்டிய காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
  • அவர் மீது துறை ரீதியான கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  • சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட அவரது பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்.

பங்கேற்பு:
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கலந்து கொண்டு காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் நிறைவில் மாவட்டச் செயலாளர் முகம்மது மீரான் நன்றியுரை ஆற்றினார்.

தொடர்புக்கு:
H. சித்தீக் ரகுமான் BE, (மாவட்டத் தலைவர், TNTJ)
தொலைபேசி: 83445 62682, 83445 62683, 83445 62688

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments