கோட்டைப்பட்டினத்தில் பிப். 8-ல் இலவச கண் சிகிச்சை முகாம்!



கோட்டைப்பட்டினம் ஆனா அறக்கட்டளை, புதுக்கோட்டை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி தி ஐரிஸ் ப்ளூம் கண் மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட இலவச கண் பரிசோதனை முகாம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறுகிறது.

கோட்டைப்பட்டினம் சங்கம் ஆலமரம் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (08.02.2026) காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.  

பரிசோதனைகள்
இம்முகாமில் கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் நீர் அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள் கண்டறியப்படும். மேலும், கணினி மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டு கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் மாறு கண் குறைபாடுகளுக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். குழந்தைகளுக்கெனத் தனித்துவமான கண் பரிசோதனைகளும், லேசிக் சிகிச்சை குறித்த வழிகாட்டல்களும் வழங்கப்பட உள்ளன.

சிறப்புச் சலுகைகள்
முகாமில் பங்கேற்பவர்களுக்குக் குறைந்த விலையில் கண்ணாடிகள் வழங்கப்படுவதுடன், அறுவை சிகிச்சைகள் சலுகை கட்டணத்தில் செய்து தரப்படும். குறிப்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அனைத்து வகையான தனியார் காப்பீட்டுத் திட்டங்களும் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

கண்ணாடி அணிவதைத் தவிர்க்க விரும்பும் நபர்களுக்கு லேசர் சிகிச்சையில் சிறப்புச் சலுகைகள் உண்டு. முகாமிற்கு வரும் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைக் கட்டணம் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு
91503 53412, 96771 77490 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments