மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி: புதுக்கோட்டை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்




மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் புதுக்கோட்டை வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன.

செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி வண்டி எண்: 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி மாற்றுப்பாதையில் மதுரை, மானாமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும்.

இதேபோல், வண்டி எண்: 16352 நாகர்கோவிலில் இருந்து மும்பை வரை செல்லும் சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 12-ந்தேதி மற்றும் 15-ந்தேதி மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் மும்பைக்கு புறப்பட்டு செல்லும். மேலும் வண்டி எண்: 12666 கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 14-ந்தேதி மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் ஹவுராவுக்கு புறப்பட்டு செல்லும்.

கோவை - நாகர்கோவில்

குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16128) இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, வழியாக திருச்சி வந்து பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

மேலும் கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07229) வருகிற 13-ந்தேதி மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, வழியாக திருச்சி வந்து பின்னர் ஹைதராபாத் புறப்பட்டு செல்லும். மேலும் கோவையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16322) வருகிற 14-ந்தேதி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்லும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments