புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீமிசல் கடைவீதியில் நாட்டு படகு பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆர். புதுப்பட்டிணம் மீன் மார்க்கெட் கடற்கரை இணைப்பு சாலையை போர்க்கால அடிப்படையில் உடனே சரி செய்ய வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மழையால் புகையான் எரி பூச்சி போன்ற பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகளின் காப்பீட்டுத் தொகையை நான்காண்டுகளாக வழங்காததை கண்டித்து கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காப்பீட்டு நிறுவங்களின் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்க்கையை மிகவும் கடுமையாக பாதிக்கும் ரெட்டை மடி. மிச்சர் மடி, சுருக்குவலை போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு மீன்பிடி சாதனங்கள் வழங்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லையை மீறி நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்குள் மீன் பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட லைட் வைத்து மீன் பிடிப்பதால் கடலில் மீன்களின் வாழ்க்கை அழிகிறது என்றும் கோஷங்களை எழுப்பினர் இதில் கோவிந்தராஜ்ஏஐ யூ டி யூசிமாநில செயற்குழு தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.