கோபாலப்பட்டிணம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடும்ப விபரப் பதிவு முகாம்!




கோபாலப்பட்டிணம் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவப் பயனாளிகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை உடனே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான சிறப்புப் பதிவு முகாம் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

நேரம் மற்றும் இடம்
இந்த முகாம் அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில் உள்ள இ-சேவை கட்டிடத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும்.

தேவையான அசல் ஆவணங்கள்
பதிவு செய்ய வரும் மீனவர்கள் பின்வரும் அசல் (Original) ஆவணங்களைக் கொண்டு வருவது அவசியமாகும்:
  1. குடும்ப அட்டை (Ration Card)
  2. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்
  3. மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அட்டை
  4. மீனவர் நலவாரிய அட்டை
  5. படகு உரிமம் (இருந்தால் மட்டும்)

கூடுதல் விபரங்கள்
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித் தகுதி மற்றும் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா உள்ளதா போன்ற விபரங்களையும் முகாமில் தெரிவிக்க வேண்டும். இந்தப் பதிவினை மேற்கொள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு நபர் மட்டும் நேரில் வந்து விபரங்களை சமர்ப்பித்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவ குடும்பங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விபரங்களை தவறாமல் பதிவு செய்து கொள்ளுமாறு கோபாலப்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments