கோபாலப்பட்டிணத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் பொழுதுபோக்கு நிகழ்வு நடத்த மே 1-ல் ஏலக் குத்தகை அறிவிப்பு!



புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் சார்பில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஊர் ஈத்கா விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஜமாஅத் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இன்ஷா அல்லாஹ், வருகின்ற மே மாதம் 28-05-2026 (வியாழக்கிழமை) அன்று ஹஜ் பெருநாள் (தியாகத் திருநாள்) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நமது ஊர் ஈத்கா விளையாட்டு மைதானத்தில் மே 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்களுக்கு (வியாழன், வெள்ளி, சனி) பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏலக் குத்தகை வருகின்ற 01-05-2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. அன்று மதியம் ஜும்மா தொழுகைக்குப் பிறகு நடைபெறும் ஊர் பொதுக் கூட்டத்தில் இந்த ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு ஜமாஅத் பொருளாளர் மு.பஷீர் அலி (8248052720) என்பவரைத் தொடர்பு கொள்ளலாம் என கோபாலப்பட்டிணம் சுன்னத்வல் ஜமாஅத் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments