சவுதி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி: மே 2-ல் 'விழி' அமைப்பின் இணையவழி வழிகாட்டி நிகழ்ச்சி



இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - விழி அமைப்பின் (மத்திய மண்டலம்) சார்பில், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாவது 'இணையவழி கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி' வரும் மே மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் நிலவும் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அங்கு சேருவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

சிறப்பு விருந்தினர்
ரியாத் கிங் சவுத் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், IWF - விழி அமைப்பின் மத்திய மண்டல துணைச் செயலாளருமான Dr.மீரா மொய்தீன்Ph.D. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அவர் சவுதி பல்கலைக்கழகங்களில் உள்ள பாடப்பிரிவுகள், உதவித்தொகை (Scholarships) மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விரிவான விளக்கங்களை அளிக்க உள்ளார்.

நிகழ்ச்சி விபரங்கள்
தேதி:மே 2, 2026 (சனிக்கிழமை)
நேரம்:சவுதி, கத்தார், குவைத், பஹ்ரைன்: இரவு 7:00 மணி
ஐக்கிய அரபு அமீரகம்: இரவு 8:00 மணி
இந்தியா: இரவு 9:30 மணி

பங்கேற்பாளர்கள்
இந்த இணையவழி நிகழ்ச்சியில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜூம் (Zoom) இணைப்பு: https://us02web.zoom.us/j/85487970722

எதிர்கால தலைமுறையினரின் கல்வி மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வத்துடன் அனைவரும் பங்கேற்குமாறு விழி அமைப்பின் மனிதவள மேம்பாட்டு அணி அழைப்பு விடுத்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments