GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பில் 3-ஆம் ஆண்டாக அரஃபா நோன்பு கஞ்சி விநியோகம்: பெரிய பள்ளி வளாகத்தில் இன்று மே.27 வழங்க ஏற்பாடு!



புனிதமிக்க அரஃபா நோன்பை முன்னிட்டு, கோபாலப்பட்டிணம் ஜிபிஎம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக இன்று (புதன்கிழமை) பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.

​இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

​நமது 'ஜிபிஎம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை'யின் மக்கள் நலப்பணிகளின் ஒரு பகுதியாக, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகிக்கப்பட உள்ளது. இன்று (27-05-2026) புதன்கிழமை மாலை 3:30 மணியளவில், நமது ஊர் பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் இந்த நோன்பு கஞ்சி விநியோகம் நடைபெறும்.

​எனவே, நமது ஊர் பொதுமக்கள் மற்றும் நோன்பாளிகள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தந்து நோன்பு கஞ்சியைப் பெற்றுச் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

​இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜிபிஎம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments