அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவு: தவெக வேட்பாளர் ஜெ.முகமது பர்வேஸ் வெற்றி





தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலில், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜெ.முகமது பர்வேஸ் 10,062 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் நிலவரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காகப் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கியது. அறந்தாங்கி தொகுதியில், தவெகவின் ஜெ.முகமது பர்வேஸ், காங்கிரஸ் கட்சியின் T.ராமசந்திரன், பாஜகவின் கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முத்துலெட்சுமி.ச உள்ளிட்ட மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே ஜெ.முகமது பர்வேஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். 23 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 73244 வாக்குகள் பெற்று அவர் தனது போட்டியாளரை விட 10,062 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வேட்பாளர்கள்: T.ராமசந்திரன் (காங்கிரஸ்) 63182, கவிதா ஸ்ரீகாந்த் (பாஜக) 31456  , முத்துலெட்சுமி.ச (நாதக) 9975  வாக்குகள் பெற்று உள்ளனர்

இந்த வெற்றியினைத் தொடர்ந்து அறந்தாங்கி தொகுதி தவெகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments