புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளை தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது. த.வெ.க.-2, அ.தி.மு.க.-1 இடங்களிலும் வெற்றி பெற்றது.
3 தொகுதியில் தி.மு.க.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை (தனி), ஆலங்குடி, புதுக்கோட்டை, திருமயம், விராலிமலை, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன.
இதில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க.வும், கந்தர்வகோட்டை (தனி), அறந்தாங்கி ஆகிய 2 தொகுதிகளில் த.வெ.க.வும், விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளனர்.
தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-
புதுக்கோட்டை (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டு- 2,25,944 பதிவானவை- 1,88,127
முத்துராஜா (தி.மு.க.)- 66,825,ஷெரீப் (த.வெ.க.)- 64,958,ராமச்சந்திரன் (பா.ஜனதா)- 41,089,எழிலரசி விஜயேந்திரன் (நா.த.க.)- 11,673,கைலாசகுமார் (சுயே.)- 669,ராமலிங்கம் (இ.பி.வ.உ.கட்சி)- 510,செந்தில்நாதன் (சுயே.)- 466,நியாஸ் அகமது (த.வா.க.)- 372,செல்வராஜ் (சுயே.)- 351,துரைசரவணன் (சுயே.)- 324,கோவிந்தசாமி (சுயே.)- 239,சி.கருப்பையா (சுயே.)- 233,சுபரேஷ் ராஜா (சுயே.)- 232,கங்காதரன் (சுயே.)- 210,ரமேஷ் (சுயே.)- 193,சிவக்குமார் (சுயே.)- 192,ஆர்.ராமச்சந்திரன் (சுயே.)- 190,வி.ஆர்.ஜெயகுமார் (சுயே.)- 129,சி.ராமச்சந்திரன் (சுயே.)- 128,ரெங்கன் (புதிய தமிழகம்)- 122,கருப்பையா (சுயே.)- 112,தனகோபால் (சுயே.)- 102,மணிமேகலை (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு)- 100
சி.ராமச்சந்திரன் - (சுயே.)- 89
முத்துக்குமார் (சுயே.)- 83
அறிவழகன் (சுயே.)- 81
ராஜசேகர் (வீ.வி.தொ.க.) - 74
கே.முருகேசன் (சுயே.)- 64
முத்துராஜ் (சுயே.)- 62
ராதாகிருஷ்ணன் (சுயே.)- 39
நோட்டா - 467
ஆலங்குடி (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டு- 2,12,078
பதிவானவை- 1,78,914
மெய்யநாதன் (தி.மு.க.)- 64,929
கந்தசாமி (த.வெ.க.)- 51,952
தன-விமல் (அ.தி.மு.க.)- 50,063
ராஜாராம் (நா.த.க.)- 10,652
புஷ்பராஜ் (அ.இ.பு.த.ம.மு.க.)- 618
சுரேஷ் (இ.பி.வ.உ.கட்சி)- 530
மலையாண்டி (அ.இ.ம.ம.க.)- 184
முருகேசன் (சுயே.)- 174
சசிகுமார் (சுயே.)- 158
செல்வம் (சுயே.)- 136
வன்மேகநாதன் (சுயே.)- 132
நாகராஜன் (சுயே.)- 125
திருமாறன் (சுயே.)- 91
கண்ணதாசன் (சுயே.)- 66
நோட்டா- 673
திருமயம் (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டு- 2,20,568
பதிவானவை- 1,81,364
ரகுபதி (தி.மு.க.)- 58,201
சிந்தாமணி (த.வெ.க.)- 56,709
வைரமுத்து (அ.தி.மு.க.)- 55,464
லட்சுமி சீனிவாசன் (நா.த.க.)- 9,102
சுப்பையா (புதிய தமிழகம்)- 359
துரைராஜன் (சுயே.)- 289
ராம்நாத் (சுயே.)- 287
சுப்பிரமணியன் (சுயே.)- 279
ஈஸ்வர் (சுயே.)- 238
முத்துகருப்பன் (இ.பி.வ.உ.கட்சி.)- 228
சின்னதம்பி (சுயே.)- 193
ராஜா (அ.இ.பு.த.ம.மு.க.)- 135
ராம்சிங் (த.வா.க.)- 97
சதீஷ்குமார் (சுயே.)- 86
நோட்டா - 945
திருமயம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறுகையில், தமிழ்நாட்டினுடைய இளைய சமுதாயம் மாற்றம் வேண்டும் என்று விரும்பி இருக்கிறது. அந்த மாற்றம் அவர்களுக்கு ஏமாற்றமாகிவிடக் கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. எனவே, எதிர்கால இளைய தலைமுறையினருக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தாலும், அதையெல்லாம் அவர்கள் எந்த விதத்திலே புரிந்து கொண்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் மாற்றத்தை விரும்பி இருக்கின்ற அவர்கள் ஏமாறாமல் இருந்தால் அதுவே நாட்டுக்கு நல்லது, என்றார்.
அறந்தாங்கி த.வெ.க. வெற்றி
மொத்த ஓட்டு - 2,29,792
பதிவானவை - 1,81,018
முகமது பர்வேஷ் (த.வெ.க.) - 73,244
ராமச்சந்திரன் (காங்கிரஸ்) - 63,182
கவிதா ஸ்ரீகாந்த் (பா.ஜனதா) - 31,456
முத்துலட்சுமி (நா.த.க.) - 9,975
ஷாஹுல் ஹமீத் (சுயே.) - 798
நஜிம்கான் (த.வா.க.) - 774
காளிமுத்து (சுயே.) - 762
தெட்சணா மூர்த்தி (சுயே.) - 408
அப்துல் ஜாபர் (சுயே.) - 322
முருகரத்தினம் (சுயே.) - 305
சுந்தர் (சுயே.) - 293
அருணகிரி (சுயே.) - 210
கார்த்திகேயன் (சுயே.) - 149
அய்யப்பன் (சுயே.) - 138
உதயப்பன் (சுயே.) - 134
நோட்டா - 580
விராலிமலை (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டு- 2,25,090
பதிவானவை- 2,02,152
விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)- 1,05,773
முருகேசன் (த.வெ.க.)- 43,700
செல்லபாண்டியன் (தி.மு.க.)- 40,397
சத்யலட்சுமி (நா.த.க.)- 9,467
கார்த்திகா பிரகாஷ் (அ.இ.பு.த.ம.மு.க.)- 834
மகேந்திரன் (சுயே.)- 555
திருவேந்திரன் (சுயே.)- 424
பழனிசாமி (வீ.வி.தொ.க.)- 261
செல்வராஜ் (புதிய தமிழகம்)- 251
திருமுருகன் (சுயே.)-218
பாலவேல் முருகேசன் (சுயே.)- 215
பாலசுப்பிரமணியன் (சுயே.)- 205
மணிகண்டன் (சுயே.)- 157
ஜெயகாந்தி (சுயே.)- 153
பழனிசாமி (சுயே.)- 134
பாலசுப்பிரமணியன் (சுயே.)- 130
அடைக்கலராஜ் (சுயே.)- 96
வீரமணி (சுயே.)- 90
சுப்பையா (சுயே.)- 75
ஜோதிவேல் (சுயே.)- 73
திருமுருகன் (சுயே.)- 70
சந்திரஜோதி (சுயே.)- 60
மதியழகன் (சுயே.)-58
எம்.வீரமணி (சுயே.)- 56
அழகர் (சுயே.)- 52
ராஜா (சுயே.)- 42
நோட்டா - 375
விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் கூறுகையில், தொடர்ந்து 5-வது முறையாக என்னை சட்டமன்ற உறுப்பினராக விராலிமலை தொகுதி மக்கள் நிர்வாகிகள், இளைஞர்கள் ஆகியோர் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு இருந்ததால் தான் முதல்-அமைச்சரே தோல்வி அடைந்துள்ளார், என்றார்.
கந்தர்வகோட்டை (தனி) (த.வெ.க. வெற்றி)
மொத்த ஓட்டு- 1,96,024
பதிவானவை- 1,66,230
சுப்பிரமணியன் (த.வெ.க.)- 58,795
உதயகுமார் (பா.ஜனதா)- 47,756
சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 46,734
நதியா (நா.த.க.)- 10,189
அருண்குமார் (சுயே.)- 653
செந்தில்குமார் (சுயே.)- 642
லட்சுமணன் (சுயே.)- 584
தனராசு (ந.ம.க.)- 405
முருகேசன் (சுயே.)- 404
சசிகுமார் (சுயே.)- 329
நோட்டா - 1,127
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.