கோட்டைப்பட்டினத்தில் ஜூன் 30-ல் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில், "உதவும் கரங்கள்" வாட்ஸ்அப் மக்கள் சேவை மற்றும் தன்னார்வ இளைஞர்கள் குழுமம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வரும் 30.06.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

கோட்டைப்பட்டினம் சந்தைப்பேட்டை சாரா மெடிக்கல் எதிர்புறம் அமையவிருக்கும் இந்த முகாம், அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடத்தப்படும் இந்த முகாமில், இரத்த வகை கண்டறிதல், இரத்த அழுத்த அளவு பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் இதய கண்காணிப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன மருத்துவப் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. 

மேலும், நோயாளிகளின் தேவைக்கேற்ப தகுதிவாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனைகளும் மருத்துவ வழிகாட்டுதல்களும் வழங்கப்பட இருக்கின்றன.

இம்முகாம் குறித்த கூடுதல் விபரங்களைப் பெறவும், தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் "உதவும் கரங்கள்" தன்னார்வ இளைஞர்கள் குழுமத்தை 6385696767, 737894278, 7871340341 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்து பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments