தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக 28/6/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் சிறுவர்கள் , இளைஞர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு அப்துல் ஹமீது தெரு தவ்ஹீத் பள்ளிவாசலில் மாவட்ட செயலாளர் முஹமதுமீரான் தலைமையில் நடைபெற்றது!!
துணை தலைவர் தாஜுதீன் , செயலாளர் ஜமீன் , பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் ,துணை செயலாளர் இல்யாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நகர தலைவர் தாரிக் இப்ராஹிம் தீர்மானங்களை வாசித்தார்!!
இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-
மதம் மாறியவர்களின் உரிமைகள் பறிப்பு
1. இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான (BCM) இடஒதுக்கீட்டுச் சலுகையை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி ரத்து செய்துள்ளனர்.
தனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று ஷமீர் அஹமது என்பவர் தொடர்ந்த வழக்கில், மனுதாரரின் கோரிக்கையைத் தாண்டி, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பாதிக்கும் வகையில் அரசாணையை ரத்து செய்திருப்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த வழக்கில் ஆளும் தவெக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், இஸ்லாமிய சமூகம் நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை, சிறுபான்மையினருக்கான அரசு என வாயளவில் பேசும் தவெக அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் இஸ்லாமியர்களின் உரிமை நிலைநாட்டும் வகையில் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகின்றோம்..
FCRA சட்ட வரைவை தடுத்து நிறுத்துக
2.ஆளும் ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் FCRA சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் அதை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகளை செய்வதாக தகவல்கள் வருகின்றன, இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் வாழும் சிறுபான்மை கிறித்தவ சமூகத்தின் கல்வி நிலையங்கள், சொத்துக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றை பறிப்பதற்கான வேலையை மோடி அரசு வேகமாக செய்கின்றது, நாட்டின் கல்வி வளர்சிக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்த கிறித்தவ சமுதாயத்திற்கு
இழைக்கப்படும் இந்த அநீதியை இந்த கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
3)பாலியல் வன்கொடுமைகளுக்கெதிரான பேரணி
கோவை மாவட்டம் சூளூரில் பத்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட செய்தி மறைவதற்குள், கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் அத்துமீறலால் பலியாகி உள்ளது ஊத்தாங்கரை மூதாட்டியிடம் பாலியல் வல்லுறவு என தினந்தோறும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன, இவ்வாறு தினந்தோறும் நிகழ்ந்து வரும் பாலியல் அத்துமீறல்களுக்கெதிரான கண்டனத்தையும், தீர்வுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழவதும் நூற்றுக்கணக்கான பேரணிகளை நடத்த இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றோம்
மேகதாது விவகாரம்
4)மேகதாது அருகே அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு நடவடிக்கைகளை எடுத்து வரக்கூடிய நேரத்தில் அதை எதிர்த்து தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் ஒரு அணியில் திரண்டு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது
சட்டமன்றத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்களோ அதே போன்று தமிழகத்தின் உரிமைகளை காக்கும் வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள், எம்பிகள் ஒரு அணியாக ஒன்றிய அரசை வற்புறுத்தி மேகதாது அணையின் மூலமாக தமிழகத்திற்கு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
சுற்றுச்சுழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது
5.ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளமும் அப்பகுதியில் அதிக அளவில் உள்ள மாங்குரோவ் காடுகளும் கடுமையாக பாதிக்கப்படும். மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் , மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.
ஏற்கனவே கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ள சூழலில்
பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.
இது போன்ற முயற்சிகளுக்கு கடந்த காலங்களில் அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டு ஆளும் தமிழ்நாடு அரசு தற்போதும் அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்
முஸ்லிம்களின் இடஒதுக்கீடு
6)தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர் , தனது தேர்தல் அறிக்கையில் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை நிறைவேற்ற குரல்கொடுப்போம் என்று சொல்லி உள்ள தவெக அரசு,காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் போர்வைப் போர்த்துவதை நிறுத்திவிட்டு அவர் சார்ந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்ட கால கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என இந்தக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.