கார் மீது மோதியது
புதுக்கோட்டையில் இருந்து ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் செபஸ்தியார்புரம் ரோடு பகுதியில் சாலையில் பேரிகார்டு வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியை கடக்கும் வாகனங்கள் மெதுவாக சென்று வந்தன. இந்த நிலையில் நேற்று அந்த வழியாக வந்த கனரக லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பலமாக மோதியது.
இதில் லாரி மோதிய வேகத்தில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரின் மீது மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அந்த 4 கார்களின் முன்பகுதியும், பின்பகுதியும் பலத்த சேதமடைந்தன.
போக்குவரத்து பாதிப்பு
இதில் கார்களுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக புதுக்கோட்டை - ராமேசுவரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடைேய சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நமணசமுத்திரம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.