ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில் 'காவல்துறை விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு' சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் துரை தலைமை தாங்கி, விழிப்புணர்வுப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்த்துறை விரிவுரையாளர் பழனித்துரை வரவேற்புரையாற்றினார்.
துணைக்கண்காணிப்பாளர் அறிவுரை
இவ்விழாவில் அறந்தாங்கி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் (DSP) சார்லஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு வழிமுறைகள், ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விளக்கினார். மேலும், மாணவர்களின் தனிமனித ஒழுக்கம், சமுதாயத்தில் அவர்களின் பொறுப்புகள் மற்றும் சமூகக் கடமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.
அரசு உதவித்தொகை குறித்த விளக்கம்
தொடர்ந்து மாணவர்களுக்கான வழிகாட்டுதல் உரைகள் நடைபெற்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு உதவித்தொகைகள் குறித்து, கல்லூரி இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் டேவிட்கலைமணிராஜ் விளக்கமளித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்து கணினி அறிவியல் துறை விரிவுரையாளர் முனைவர் செந்தில்குமார் விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரியின் விளையாட்டுத்துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆங்கிலத்துறை விரிவுரையாளர் பூபதிராஜ் விளக்கிப் பேசினார்.
மேலும், விரிவுரையாளர்கள் கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி, ராஜலட்சுமி, நாகராஜன் ஆகியோர் மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
பேராசிரியர்கள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் வணிக நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் அன்பழகன், தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் காளிதாஸ், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் சீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள் முனைவர் கார்த்திக், முனைவர் பாலமுருகன், செந்தில்குமார், சிவராஜன், கார்த்திகேயன், வாணி, வீரவேல், புவனேஸ்வரி, இளவரசி, கலைவாணி, முத்துலெட்சுமி, சங்கீதா உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இப் பயிற்சி வகுப்பில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.