தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) புதுக்கோட்டை மாவட்டம், இரத்தினக்கோட்டை கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று (05.07.2026, ஞாயிற்றுக்கிழமை) இரத்தினக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு TNTJ மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபிபுல்லா தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் யாசின், ஷேக் அலாவுதீன், அசாருதீன், சாதிக் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்து முகாம் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
மனிதநேய அடிப்படையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது குருதியை கொடையாக வழங்க முன்வந்தனர். இதில், வந்திருந்த பொதுமக்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவத் தகுதியின் அடிப்படையில் முதற்கட்டமாக 30 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இரத்ததானம் வழங்கிய கொடையாளர்கள் அனைவரையும் பாராட்டி, அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ஹேமலதா (DCH) அவர்கள் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபிபுல்லாஹ் நன்றியுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், *"ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போன்றவர்" என்ற திருக்குர்ஆனின் உன்னதமான போதனையின் அடிப்படையில், மனித உயிர்களைக் காக்கும் உன்னத நோக்கோடு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இம்முகாம் மிகச் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய மருத்துவர் டாக்டர் ஹேமலதா, அவரது மருத்துவக் குழுவினர், இரத்தக் கொடையாளர்கள் மற்றும் முகாம் ஏற்பாடுகளைச் செய்த கிளை உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜமாஅத் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.