அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மறுநாள் (ஜூலை 8) மின் நிறுத்தம்! மின்வாரியம் அறிவிப்பு!!



அறந்தாங்கி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூலை 8) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறந்தாங்கி நகர் தமிழ்நாடு மின் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பொறிஞர் கே. தனபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
​அறந்தாங்கி நகர் உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அழியாநிலை (110/33-11 KV), அறந்தாங்கி (33/11 KV) மற்றும் மறமடக்கி (33/11 KV) ஆகிய துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, வருகின்ற 08.07.2026 (புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அறந்தாங்கி நகர் பகுதிகள் முழுவதும் மின் விநியோகம் இருக்காது.
மேலும், அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி, குரும்பூர், ரெத்தினக்கோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், மறமடக்கி, திருநாளூர், சிட்டங்காடு, கறம்பக்காடு மற்றும் சுனையக்காடு ஆகிய பகுதிகளிலும் இந்த மின்தடை அமலில் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் இந்த மின்தடை நேரத்தைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறும், மின்வாரியப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: தவிர்க்க முடியாத பட்சத்தில், இந்த மின்தடை அறிவிப்பில் கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments