உக்ரைனில் சிக்கி உள்ள கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர் ரியாஸ் கான் தற்போது‌ இந்திய பயணம் நிலை என்ன ❓



உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த சில தினங்களுக்கு மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த படையெடுப்பால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ரஷ்யாவின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது.
அதனால், ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர். குறிப்பாக, உக்ரைனில் 5,000-த்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் சிக்கியுள்ளன. அவர்களை மீட்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்துவருகின்றனர்.

இந்த நிலையில்  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே  கோபாலப்பட்டிணம் அவுலியா நகரைச் சேர்ந்த ரியாஸ் கான் (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோரத் நகரில் தங்கி அங்குள்ள ஒரு உஷ்கோரத் நேஷனல் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கி உள்ளனர். போர் ஆரம்பித்த நாள் முதேல  உக்ரைனில் உள்ள பிரவசலவ்னா நபரிஸ்னா 8 , உஷ்கோரத் இடத்தில் தங்கி பின்னர் உக்ரைன் அருகே உள்ள ஹங்கேரி நாட்டில் அழைத்து வரப்பட்டு  புத்தபெஸ்ட் எனும்  இடத்தில் DANUBIUS ஹோட்டலில் கடந்த நான்கு நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

 இதுகுறித்து கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ரியாஸ் கான் கூறுகையில் :

கடந்த நான்கு நாட்களுக்கு முன் உக்ரைனில் இருந்து அண்டை நாடான ஹங்கேரி நாட்டிற்கு இந்திய அரசு எங்களை அழைத்து வந்தது. தற்பொழுது புத்தபெஸ்ட் எனும்  இடத்தில் DANUBIUS ஹோட்டலில் தங்கி இருக்கின்றோம். இதனால் நாங்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளோம்.மேலும் எப்பொழுது தாய்நாடு செல்வோம் என்ற ஏக்கத்தோடு ஒவ்வொரு நாட்களை நகர்த்தி வருகின்றோம். விமான ஏற்பாடு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை எனவும் எங்களை மீட்க தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments