புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை




புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று (திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments