கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஆக.15) 80-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், 2025–2026-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ‘GPM மக்கள் மேடை’ சார்பாக நினைவுக் கேடயமும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலோசனை உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
சாதனை படைத்த மாணவர்கள் விவரம்
பத்தாம் வகுப்பு
முதலிடம்:ஜோ.ஸ்ரீவித்யா (த/பெ ஜோதிமணி) – 401 மதிப்பெண்கள்
இரண்டாமிடம்:சி.ரபியா பேகம் (த/பெ சித்திக் அலி) – 383 மதிப்பெண்கள்
மூன்றாமிடம்:மு.அகமது (த/பெ முகம்மது யூசுப்) – 369 மதிப்பெண்கள்
பன்னிரண்டாம் வகுப்பு
முதலிடம்:ஜி.முகம்மது ஜாபிர் (த/பெ ஜியாவுர் ரஹ்மான்) – 527 மதிப்பெண்கள்
இரண்டாமிடம்:அ.ஹரிகரன்பிரபு (த/பெ அப்துல் வஹாப்) – 524 மதிப்பெண்கள்
மூன்றாமிடம்:கா.ராஜலெட்சுமி (த/பெ காளிமுத்து) – 512 மதிப்பெண்கள்
சாதனை படைத்து ஊருக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களை 'GPM மக்கள் மேடை' நிர்வாகிகள், உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் அனைவரும் பாராட்டித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
![]() |
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:







0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.