வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதலுக்கு விண்ணப்பிக்கலாம்



வாக்காளராக சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.  
பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய மனுக்களை இன்று(30/10/2011) முதல் வரும் நவம்பர் 6ம் தேதி வரை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் சேர்க்க திருத்த நீக்க 6ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.  

இடம்: ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி (பெரியபள்ளிவாசல் அருகில்)


2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைவடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வரும் 24ம் தேதியன்று நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 
விண்ணப்பங்களை பெற்று அங்கேயே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: 
1.பாஸ்போட் சைஸ் போட்டோ (இரண்டு )
2.ரேசன் கார்டு நகல் -1
3.வயது சான்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது நகல் -1


முகவரி சான்றுகள் :
1.ரேஷன் கார்டு(குடும்ப அட்டை)
2.வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம்
3.தொலைபேசி ரசீது
 4.சமையல் காஸ் இணைப்பு 
ஆகியவற்றின் சமீபத்திய ரசீது போன்றவற்றை முகவரி சான்றாக சமர்ப்பிக்கலாம். 25 வயதுக்கு உட்பட்ட மனுதாரர்களுக்கு வயது சான்றிதழ் கட்டாயம் தேவை. 


வயது சான்றுகள் :
1.ஓட்டுநர் உரிமம்
2. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
3.பிறப்புச் சான்றிதழ் (BIRTH CERTIFICATE)
4.மாற்றுச் சான்றிதழ் (TC)


என்ன படிவம் தேவை?
வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்க படிவம் எண் 6ல் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏல் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ பெயரை நீக்க படிவம் 7ல் பெயர் வயது பாலினம் உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெற செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பங்கள் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிக்கும் முன்னர் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பின்னரே பெயர் பட்டியலில் சேர்க்கப்படும்.
புகைப்பட வாக்காளர் அட்டை தொலைந்திருந்தால் தாசில்தார் (ஆவுடையார்கோவில்) அல்லது மண்டல அலுவலகத்தில் எப்போதும் விண்ணப்பிக்கலாம். வெளி நாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் '6 ஏ' நேரில் அல்லது தபாலிலும் அளிக்கலாம். விண்ணப்பத்துடன் புகைப்படம் ஏனைய பிற விவரங்களுடன் விசா செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட் நகலையும் கையோப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments