மீமிசலில் நாளை கடையடைப்பு போராட்டம்

 மீமிசல்: சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்து மீமிசலில் நாளை (01.12.2011) ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.


சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 01.12.2011 நாளை ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேற்படி போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து மீமிசலில்லுள்ள அனைத்து கடைகளும் கடையடைப்பு செய்வது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை நாடு முழுவதும் சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments