மாமறைக் கொண்ட மார்க்கம்!ஏற்றத்தாழ்வு இதில் இல்லை;
ஏற்றுக்கொண்டால் குறையில்லை;
ஐங்காலத் தொழுகையுண்டு;
ஏழ்மை விரட்ட ஜக்காத் உண்டு;
உன்னையறிய நோன்புண்டு;
ஒற்றுமைக் காண ஹஜ் உண்டு!


கடுமையானச் சட்டமுண்டுக்
கொடியவர்களுக்கு;
இனிமைச் செய்யும்
இரக்கமுண்டு வறியவர்களுக்கு!

கொன்றொழிக்கும் வட்டியைக்
கொன்றொழித்து;
மென்றுத்திண்ணும்
புறம்பேசுதைலைப்
புறம் தள்ளி;
தள்ளாட்டம் போடும்
மதுவிற்கு தடைப்போட்டு;
சீரழிக்கும் விபச்சாரத்தைச்
சீர்குலைத்து;
மனிதக்குலம் செழிக்க
மாமறைக் கொண்ட மார்க்கம்!

Post a Comment

0 Comments