மீமிசலில் வியாபாரிகள் முழு கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புமீமிசல்: சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீமிசலில் நேற்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இந்தியாவில் சில்லரைவணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதிப்பதை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரி வலியுறுத்தியும் நேற்று நாடு முழுவதும் வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

  ஜவுளிக்கடை, ரெடிமேட் கடைகள், பேன்சி ஸ்டோர், நகை கடைகள், இரும்பு கடைகள், மளிகை கடைகள், மெடிக்கல்,  டீக்கடைகள், என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.  இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஆனால் ஒரு சில ஓட்டல்கள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டது. முழு கடையடைப்பால் மீமிசல் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.இதுகுறித்து மாவட்ட வர்த்தக கழக தலைவர் சீனுசின்னப்பா கூறியதாவது:  இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அந்நிய நாட்டின் முதலீ ட்டை அனுமதித்தால் இந்தியாவில் உள்ள பொருளாதாரம் முற்றிலும் சுரண்டப்படும். இதனால் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து சில்லரை வியாபாரிகளும் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படுவார்கள். மாவட்டத்தில் முழு கடையடைப்பை 100 சதவிதம் வெற்றி பெற செய்த வர்த்தகர்கள், வணிகர்கள் அனை வருக்கும் மாவட்ட வர்த்தக கழகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.


புதுக்கோட்டை மாவட்ட வர்த்தககழகம் சார்பில் புதுக்கோட்டை, கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, மீமிசல் ஆகிய பகுதிகளில் சுமார் 4,000 கடைகள் மூடப்பட்டன.

Post a Comment

0 Comments