பாலக்குடியில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்.!



புதுக்கோட்டை மாவட்டம் பாலக்குடி கடல் பகுதியில் அழுகிய நிலையில் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியது.


புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகேயுள்ள பாலக்குடியிலிருந்து நாட்டுப் படகு மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று அப்பகுதியில் கரையோரமாக சுமார் 25 அடி நீளத்தில் திமிங்கலம் இறந்து அழுகிய நிலையில் ஒதுங்கியுள்ளது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் கிடைத்த மீன்வளத்துறையினர், கடலோரக்காவல் படையினர், வனத்துறையினர், கால்நடைத்துறையினர் விசாரணை செய்தனர். இதுகுறித்து மீன்வளத்துறையினர் கூறும்போது ஆழ்கடல்பகுயில் காணப்படக்கூடிய சுமார் 25 அடி நீளத்தில் 2 டன் எடையுள்ள இந்தத் திமிங்கலம் அந்தப் பகுதியில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஏதாவது ஒரு காரணத்தில் இறந்திருக்கலாம் என்றும், கடலில் மாசு கலத்தல் அல்லது கடல்பரப்பில் ஏற்பட்ட தட்பவெட்ப நிலை மாற்றமே அதன் இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அங்கிருந்து பாலக்குடியில் கரை ஒதுங்கியுள்ள இந்த திமிங்கலத்தின் சடலத்தை பரிசோதனை செய்து கடற்கரையோரத்திலேயே புதைக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments