கஜா' புயல் இரவு 8.00 மணி முதல் மின்சாரம் நிறுத்தம்



 
கஜா'புயல் கரையை கடப்பதனால் கோபாலபட்டினத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 8.00 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மாலை நேர நிலவரப்படி 'கஜா' புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. நாகைக்கு 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புயல் 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

 *கஜா' புயல் இன்று இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் என தேசிய பேரிடர்  மேலாண்மை ஆணையம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. நாகை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் கரைக்கால் மாவட்டங்களில் பரவலமாக கன மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும்.

* வங்கக் கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் 21 கிலோ மீட்டர் வேகத்தில்  பயணித்து வருவதாகவும், இன்று இரவு நாகை அருகே கரையைக் கடக்கும்போது ஒரு சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Post a Comment