ரயில்வே துறையில் 13,487 காலிப் பணியிடங்கள்... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்



ரயில்வே துறையில் 13,487 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல் வினியோகிக்கப்படுவதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

64 ஆயிரம் லோகோ பைலட், 62 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள், கேங்க்மேன் ஆகியோருக்கான இடங்களை நிரப்பும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதற்கான முதல்கட்ட தேர்வுகள் முடிவடைந்த நிலையில்,  இளநிலை பொறியாளர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மார்ச் மாதம் தேர்வு நடைபெறலாம்  எனத் தெரிகிறது.

தகுதி:
பொறியியல் படிப்பில் டிப்ளமோ மற்றும் பி.இ. பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி:
இளநிலை பொறியாளர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோர் ரயில் பெட்டிகள் பராமரிப்பு, மின்னணு சேவை, மின்னணு பொருட்களை கையாளுதல் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்-லைன் மூலம் நிரப்பி அனுப்ப வேண்டும், 

தேர்வு நடைபெறும் முறை:
ஆன்-லைன் மூலம் தேர்வு

கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும், அதில் ரூ.400 தேர்வு எழுதிய பின் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி. எஸ்டி பிரிவு மாணவர்கள் , மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும். அவர்கள் தேர்வு எழுதியபின் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
ஜனவரி 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு http://www.rrbcdg.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

Post a Comment