எஸ்.பி.பட்டினத்தில் சாலை விபத்து 2 பைக்குகள் மீது கார் மோதல்; ஒருவர் உயிரிழந்தார் 5 பேர் படுகாயம்



எஸ்.பி.பட்டினம் பாம்பாறு ஆற்று பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை (13/01/2019) 2 மோட்டார் சைக்கிளில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
 திருவாடானை அருகேயுள்ள திருப்புனவாசலை சேர்ந்தவர் சீனிவாசன்(42), முத்துகுடாவைச் சேர்ந்த குஞ்சுதபாதம் (27), ஸ்ரீராம் (22) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மனோஜ்குமார், சுரேஷ், ராமன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் எஸ்பி. பட்டினம் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது கடற்கரை சாலையில் பின்னால் வந்த கார் எதிர் பாராத விதமாக டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இரு மோட்டார் சைக்கிள்களிலும் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஒட்டிய குஞ்சுதபாதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் காயம் அடைந்தனர்.












அவர்கள் தொண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சீனிவாசன் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Post a Comment