புதுக்கோட்டையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (25-ஆம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (25ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி தகுதியுடையவர்கள் பங்கேற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.