புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!



புதுக்கோட்டை மாவட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு 31.01.2019 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சு.கணேஷ், இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -

உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் பயன் பெற விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாளாக 21.01.2019 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 31.01.2019 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை  5.00 மணி வரை விண்ணப்பங்களை இலவசமாக பெற்று 31.01.2019 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை பெற்ற அலுவலகத்திலேயே உரிய இணைப்புகளுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment