புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு 29ம் தேதி துவக்கம்



புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.கணேஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைநாடும் இளைஞர் படித்து பயன்பெறும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்திடத் தேவையான பல்வேறு புத்தகங்கள், மாதாந்திர சஞ்சிகைகள் மற்றும் பத்திரிக்கைகள் அடங்கிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. 

தற்சமயம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-ஐ துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் போன்ற 139 பணியிடங்கள் குறித்த போட்டித்தேர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இத்தேர்விற்கு விருப்பமுள்ள அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்குத் தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக 29.01.2019 (செவ்வாய்கிழமை) முதல் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 

 பயிற்சிவகுப்புகள் அலுவலக வேலைநாட்களில் தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்புகளில்  சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், இதுபோன்ற போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் இலவச பயிற்சி அளிக்க உள்ளனர். மேலும் பயிற்சி வகுப்புகளின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்படும். 


எனவே இத்தேர்வுக்கு விருப்பமுள்ள அனைவரும் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.கணேஷ், இஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Source: செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், புதுக்கோட்டை.

https://pudukkottai.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9/

Post a Comment