வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பாஸ்போர்ட் எடுக்கும் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாஸ்போர்ட் பெறுவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ 4 முதல் 5 நாட்கள் கால அவகாசம் தேவைப்பட்டு வந்தது.
தற்போது விண்ணப்பிக்கும் முறைகள் அனைத்தையும் ஆன்லைன் தொழில்நுட்பத்திற்கு மாற்றம் செய்துள்ளதால், கால அவகாசம் பாதியாக குறைந்து 2-3 நாட்களில் பாஸ்போர்ட்டை பெற முடியும்.
தற்போது விண்ணப்பிக்கும் முறைகள் அனைத்தையும் ஆன்லைன் தொழில்நுட்பத்திற்கு மாற்றம் செய்துள்ளதால், கால அவகாசம் பாதியாக குறைந்து 2-3 நாட்களில் பாஸ்போர்ட்டை பெற முடியும்.
கடந்த ஆண்டு மட்டும் வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கு 2,72,500 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் துபாயில் மட்டும் 2,11,500 பாஸ்போர்ட்டுகளும், துபாயைச் சேர்ந்த அபுதாபியில் 61,000 பாஸ்போர்ட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. முந்தைய முறைப்படி, ஒரு பாஸ்போர்ட்டை பெறவேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டுமென்றால், முதலில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் இந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திடம் அனுமதி பெற வேண்டும். இதன்பிறகு தகவல்கள் பரிசோதனை உள்ளிட்டவை நடைபெறும். இவ்வாறு ஒரு பாஸ்போர்ட்டை பெற பல நாட்கள் ஆகும்.
இதன்பின்னர் பெருமளவு முறைகள் ஆன்லைனுக்கு கொண்டுவரப்பட்டு, 4-5 வேலை நாட்களில் பாஸ்போர்ட்டை பெறும் வகையில் நிர்வாகம் மாற்றப்பட்டது. இதையும் எளிதாக்கும் வகையில் தற்போது அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 வேலை நாட்களிலேயே ஒருவர் பாஸ்போர்ட்டை பெற முடியும். அத்துடன் பழைய பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக, சிப் பொருந்திய புதிய இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் முறைகேடுகள் மற்றும் பாஸ்போர்ட் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.