நாகுடியில் நாளை (30/01/2019) காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்களின் புதல்வர் தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர்  S.T.ராமச்சந்திரன் அவர்கள் வழிகாட்டுதல்படி.

அறந்தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக நாளை (30/01/2019) புதன்கிழமை காலை 09.00 மணியளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நாகுடியில் நடைபெற உள்ளது.

அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் முன்னணி உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள அழைக்கிறது இளைஞர் காங்கிரஸ்.



கோரிக்கைகள் :

  • நாகுடி பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படாத பயிர்காப்பீட்டு தொகையை உடனடியா வழங்கிட கோரி...!
  • கல்வி கடன் பெற்ற மாணவர்களின் கடன் தொகையை பெற்றோரின் பயிர் காப்பீடு தொகையில் வரவு வைக்க வலியுறுத்துவதை கண்டித்து...!
  • வங்கியில் காப்பீடு செய்தவர்களுக்கு முழுவதுமாக ஏன்  காப்பீட்டு தொகை இன்னும் வழங்கப்படவில்லை? என்பதை கண்டித்து...!
  • 2018 நவம்பரில் தர வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை என்ன காரணத்தினால் தாமதப்படுத்தினீர்கள் என்பதை விளக்கிட கோரி...!
  • கூட்டுறவு சங்க காசோலைகளை வங்கியில் மாற்றும் பொழுது பத்து நாட்களுக்கு மேல் தாமதப்படுத்துவதை கண்டித்து...!

Post a Comment