மணமேல்குடியில் திங்கள்கிழமை (21/01/2019) கள்ளச்சாராயத்திற்கு எதிரான பேரணி நடைபெற்றது. மணமேல்குடியில் மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வுப் பேரணிக்கு, மணமேல்குடி வட்டாட்சியர் பி.வில்லியம் மோசஸ் தலைமை வகித்தார்.
அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர் து.செல்வவிநாயகம் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சி.முத்தரசு உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
பேரணியில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட பேரணியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நன்றி: தினமணி