பெல் (BHEL) நிறுவனத்தின், ஆற்றல் துறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள, FTA - பாதுகாப்பு அதிகாரி என்ற பணிக்கு 38 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு 2 வருட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான விருப்பமும், தகுதியும், முன் அனுபவமும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி : FTA - பாதுகாப்பு அதிகாரி
காலிப்பணியிடங்கள்:
ஆற்றல் துறையின் தெற்குப் பிரிவு: 29
ஆற்றல் துறையின் கிழக்குப் பிரிவு: 3
ஆற்றல் துறையின் மேற்குப் பிரிவு: 6
மொத்தம் = 38 காலிப்பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 23.01.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2019
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேரக் கடைசி நாள்: 18.02.2019
பின்தங்கிய பகுதியில் இருப்போர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேரக் கடைசி நாள்: 18.02.2019
ஒப்பந்தம் - 1 வருடம் / 2 வருடங்கள்
வயது : (23.01.2019 அன்று) 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
பொறியியல் / தொழில்நுட்பத்தில், மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / சிவில் / புரொடக்ஷன் / இன்டஸ்ரியல் இன்ஜினியரிங் துறையில் முழுநேர இளங்கலை பட்டப்படிப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று, குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பொது / ஓபிசி பிரிவினரும், 50% மதிப்பெண்களுடன் எஸ்.சி / எஸ்.டி பிரிவினரும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
அத்துடன் குறைந்தது 1 வருட முழுநேர டிப்ளமோ படிப்பு, இன்டஸ்ரியல் சேஃப்டி டிப்ளமோ (DGFASLI ஆல் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு) மத்திய தொழிற்துறை நிறுவனத்தில் பயின்றவராகவோ / முதுகலை இன்டஸ்ரியல் சேஃப்டி பட்டயப்படிப்பை தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றவராகவோ / டிப்ளமோ படிப்பை, தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாண்மை துறையை NITIE - மும்பையில் பயின்றவராகவோ இருத்தல் வேண்டும்.
சம்பளம்:
மாதம் 62,100 ரூபாய்
(அதுமட்டுமன்றி கூடுதலாக, 2 லட்சம் மதிப்புள்ள காப்பீடு அவர்களுக்கு வழங்கப்படும்)
முன் அனுபவம்:
குறைந்தது 2 வருடங்களாவது, கட்டுமானப் பிரிவின் கீழ் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள், http://intapp.bhelpssr.co.in:9082/FTA_Recruitment/application_form_hse.jsp என்ற இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
ஆப்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள், http://www.bhelpssr.co.in அல்லது http://careers.bhel.in/bhel/in என்ற இணையத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிறகு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
தேர்வுக் கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் - 200 ரூபாய்
எஸ்.சி / எஸ்.சி பிரிவினர் / PWBD தேர்வுக்கட்டணத்தில் விலக்கு உண்டு.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
அனைத்து விண்ணப்பதாரர்களும், கட்டணத்தை ஏதேனும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் டிடி (DD) favour of BHEL, PSSR payable at Chennai என்ற பெயருக்கு எடுத்து கீழே உள்ள முகவரிக்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். அந்த டிடி-யின் பின்புறத்தில் விண்ணப்பதாரருடைய பெயர் மற்றும் பணியின் பெயரை கட்டாயமாக எழுத வேண்டும்.
எஸ்.சி / எஸ்.சி பிரிவினர் / PWBD போன்றோருக்கு தேர்வுக்கட்டணத்தில் விலக்கு இருந்தாலும் அவர்களும் கீழே உள்ள முகவரிக்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை தபாலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Addl.General Manager(HR),
BHEL, Power Sector Southern Region,
690, EVR Periyar Building, Anna Salai,
Chennai-600035.
வயது தளர்வு போன்ற மேலும் தகவல்களுக்கு
என்ற இணையதளத்தை பார்க்கவும்.