நாளை முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது



தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (05/01/2019) சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற இடங்களில் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பொங்கல் சிறப்பு தொகுப்புடன்  ரூ.1000 ரொக்கத்தொகை வழங்கப்படுகிறது.

காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்றும், பொங்கல் பரிசு மற்றும் இரண்டு 500 ரூபாய் தாள்களாக ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை பகுதி வாரியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நாட்களில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற விவரம் அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்றே ஒட்டி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment