புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர், அவசர சிகிச்சை மேலாண்மை மேற்பார்வையாளர், மண்டல வாகன மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முக தேர்வு முகாம் நாளை (9ந்தேதி) இலுப்பூரில் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு பெறுபவர்கள் தமிழகத்தில் எந்த பகுதியிலும் பணிநியமனம் செய்ய ப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிநியமன ஆணை அன்றே வழங்கப்படும்.
தகுதி:
1.ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி,
2.இலகுரக வாகனம் ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும்.
3.23வயதுக்கு மேலும், 35வயதுக்கு மிகமாலும் இருக்க வேண்டும்.
4.ஆண்கள் 162 சென்டி மீட்டருக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும்.
5.ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
6.தகுதி சான்றிதழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களும் கொண்டு வர வேண்டும்.
7.ஓட்டுனர் பணிக்கு வருபவர்களுக்கு எழுத்து தேர்வு தொழில் நுட்ப தேர்வு மனித வளத்துறை நேர்கானல் கண்பார்வை சம்மந்தப்பட்ட தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.
மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி மருத்துவ மனை ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
அவசர சிகிச்சை மேலாண்மை மேற்பார்வையாளர் பணிக்கு பி.இ. (மெக்கானிக்) அல்லது ஆட்டோ இன்ஜினியரிங் மற்றும் அனைத்து பட்டம் படித்தவர்களும், எம்.பி.ஏ., அல்லது எம்.எஸ். டபிள்யு., படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 2முதல் 4ஆண்கள் முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மண்டல வாகன மேற்பார்வையாளர் பணிக்கு பி.இ.,டிப்ளமோ(ஆட்டோ மொபைல்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.இ முடித்தவர்கள் 2 முதல் 4 ஆண்டுகள் மற்றும் டிப்ளமோ 4 முதல் 6 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்ற வர்களாக இருக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.