புதுக்கோட்டையில் கொடிகட்டி பறக்கும் மூனு நம்பர் லாட்டரி வியாபாரம்! விரைந்து தடுக்க கலெக்டரிடம் மனு கொடுக்க அழைக்கிறது 27/02/2019 தமிழக வாழ்வுரிமை கட்சி



புதுக்கோட்டையில் கொடிகட்டி பறக்கும் மூனு நம்பர் லாட்டரி வியாபாரம்! தினமும் கூலி வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை அப்படியே மூனு நம்பர் லாட்டரி வாங்கி எப்படியாவாது பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற பேராசையில் கடனாளி ஆகி கடைசியில் தூக்கு போட்டு தற்கொலை செய்யும் நிலையில் பல குடும்பங்கள் உள்ளது.

 மேலும் வீட்டில், பெண்களும் குழந்தைகளும் பட்டினியில் சாகிறார்கள். எனவே பல குடும்பத்தை காவு வாங்கும் இந்த மூனு நம்பர் லாட்டரி நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஒழிக்கவேண்டி நாளை (27.02.2019) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பெண்கள் கை குழந்தையுடன் தாலி பிச்சை கேட்டு மனு கொடுக்க இருக்கிறார்கள். அது சமயம் வாய்ப்புள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவன்: தமிழக வாழ்வுரிமை கட்சி, மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து கட்சி தோழமைகள்!

Post a Comment