திருச்சியில் ஒப்பந்த அடிப்படையிலான வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு: நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு



திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியில் ஒப்பந்த அடிப்படையில் நிகழ்ச்சிகளை வழங்க தகுதியானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி வானொலி நிலைய இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய நிகழ்ச்சிகளை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்க விருப்பமுள்ளவர்கள் நேரடி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இன்று முதல் பிப்.26 முதல் 28ஆம் தேதி வரை திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வானொலி நிகழ்ச்சிகளை உருவாக்கி தருவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் கூடிய படைப்பாற்றல் மற்றும் கணினி சார்ந்த நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன் இருக்க வேண்டும்.

குறிப்பு: திருச்சி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியம். தகுதியானோர் உரிய ஆவணங்களோடு திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

Post a Comment