பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.!



ஜியோ வருகைக்குப் பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது, இருந்தபோதிலும் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையுடன் சிறந்த டேட்டா நன்மைகள் மற்றும் அதிக நாள் வேலிடிட்டி தருவதால் பெரும்பாலும் மக்கள் ஜியோவையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.

அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக கிளம்பிய வதந்தி அதிக பரபரப்பை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும். ஆனால் பிஎஸ்என்எல் கிராமம் முதல் நகரம் வரை சிறந்த சேவையை வழங்கிவருவதும் என்பதும் உண்மை. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தி பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவர தயார் நிலையில் உள்ளது.


மேலும் வேலூரில் மத்திய தொலை தொடர்புதுறையின் (பிஎஸ்என்எல்) அலுவலகத்தின் பொதுமேலாளர் வெங்கட் ராமன் செய்தியாளர்களிடம் கூறியது என்னவென்றால். பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் தொடர்ந்து மக்களுக்கான சேவையை செய்து வருகிறது.

பின்பு வேலூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை துவங்கவுள்ளது என்றும், அதன்பிறகு இந்த 4ஜி சேவையானது, சேலம் மற்றும் கோவையில் சிறிய அளவில் துவங்கப்பட்டது வெள்ளோட்டம் நடந்ததும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் 102 புதிய 3ஜி கோபுரங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 65 எண்ணிக்கை கொண்ட 3ஜி கோபுரங்கள் முழுமையாக அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றும் வெங்கட் ராமன் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுககு அதிகளவில் சலுகைகளை வழங்கி வருவதால் மற்ற தொலைதொடர்பு சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருவதாக வெங்கட் ராமன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment