புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ளோர் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், வெளிமாவட்டத்தில் வசிப்போர் தங்களது நிலம் குறித்த தகவல்களை ஆவணங்களுடன் நேரில் வந்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நடைபெறும் இக்கணக்கெடுப்பில் கிராம நிர்வாக அலுவலர், வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாவட்டங்களில் வசிப்போரின் நில விவரங்களை முழுமையாக எடுக்க முடியவில்லை என்பதால், வெளிமாவட்டங்களில் வசிப்போர் புதுக்கோட்டையிலுள்ள தங்களது நில விவரங்களை ஆவணங்களுடன் நேரில் வந்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
