புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து புதன்கிழமை மாலை ஜெகதாபட்டினம் ஆண்டியப்பன் மகன் ஆனந்தவேல்(42) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் மகன் பிரவீன்(25), சிவசங்கர் மகன் தாமோதரன் (32), செல்வம் மகன் சிங்கராஜ்(25), கருப்பையா மகன் குமார்(30) உள்ளிட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அப்போது, எல்லை தாண்டி 33 கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
