குவைத் நாட்டில் தொலைத் தொடர்பு பொறியாளர், டெக்னீசியன் உட்பட பல்வேறு பணிகளில் வேலை கிடைக்க தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு செய் துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குவைத் நாட்டிலுள்ள இந்தியதொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்ற டெலிகாம் இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள்.
வேலை: டெலிகாம் இன்ஜினீயர்
தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 5 ஆண்டுகள்.
வயது வரம்பு: 21 முதல் 45 வரை.
சம்பளம்: ரூ.58 ஆயிரம்.
வேலை: டெலிகாம் டெக்னீசியன், கேபிள் பொருத்துபவர் பணிக்கு (பைபர் ஆப்டிக் மற்றும் காப்பர் கேபிள்)
தகுதி: பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு
அனுபவம்: 3 ஆண்டுகள்
வயது வரம்பு: 21 முதல் 45 வரை.
சம்பளம்: ரூ.31,500.
வேலை: இலகுரக வாக ஓட்டுநர்
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள்
வயது வரம்பு: 21 முதல் 45 வரை.
சம்பளம்: ரூ.26,000.
வேலை: பாதுகாப்பு அதிகாரி
தகுதி: எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருப்பதுடன்
அனுபவம்: 3 ஆண்டு பணி அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 45 வரை.
சம்பளம்: ரூ.35,000
வேலை: மக்கள்தொடர்பு அலுவலர்
தகுதி: பட்டப் படிப்பு
அனுபவம்: 5 ஆண்டு அனுபவம், ஆங்கிலம், அரபி மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர்கள் தேவை.
வயது வரம்பு: 21 முதல் 45 வரை.
சம்பளம்: ரூ.35,000.
வேலை: கேபிள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு (மேசான், பைப் பேப்ரிகேஷன் தொழிலாளர்)
தகுதி: 10-ம்வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி
அனுபவம்: 3 ஆண்டு அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ.26,000.
வேலை: உதவியாளர்
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் வேண்டும்.
சம்பளம்: ரூ.19,000.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28/02/2019
மேற்குறிப்பிட்ட அனைத்துப் பணிகளுக்கும் தேர்வு செய்யப்படுவோருக்கு திறமைக்கேற்ப ஊதியம், இலவச இருப்பிடம், விமான பயணச்சீட்டு, மருத்துவம், காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குவைத் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட் நகல்களை tcilkuwait19@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு பிப்ரவரி 28-க்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் (http://www.omcmanpower.com/currentoppen.php) அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
