கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் திறப்புவிழா அறிவிப்பு



கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள்  திறப்புவிழா சம்பந்தமாக நேற்று  (09-02-2019 சனிக்கிழமை) மசூரா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரிய பள்ளிவாசல் கட்டிட கமிட்டியாளர்கள்(வக்ஃபு) முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள்(வக்ஃபு) மற்றும் ஊர் பொதுமக்கள்,இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.

மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1) கோட்டைப்பட்டினத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜமாதுல் ஆகிர் பிறை 30 வெள்ளிக்கிழமை (08-03-2019) அன்று திறக்கபடும் என அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) பெரிய பள்ளிவாசல் திறப்புவிழா சம்பந்தமாக வெளியூர் ஜமாத்தார்கள் அழைக்க தனி குழு அமைத்து அவர்களை  ஊர் ஜமாத்தார்கள் நேரில் சென்று அழைப்பது.

3) பெரிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைத்து ஜமாத்தார்களுக்கும் மற்றும் ஊர்  பொது மக்களுக்கும் சுமார் 20,000 முதல் 25,000 வரை சாப்பாடு பொட்டனம் தயார் செய்வது.

4) பெரிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு அனைத்து ஊர்களுக்கும் சென்று இளைஞர்கள் மற்றும் நமது ஊர் இளைஞர்களையும் ஒன்றிணைத்து சாப்பாடு மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்துவதென  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்களும் மற்றும் நமது ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் ஜமாத்தார்கள் அனைவரும் நமதூர் பெரிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கோட்டைப்பட்டினம் ஜமாத் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு:
வருகின்ற மார்ச் மாதம் 7,8 தேதிகளில் கல்யாண மற்றும் இதர தேவைகள் இருந்தால் தவிர்த்துவிட்டு பெரிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பொருளாதார தேவை என்பது மிக முக்கியமானது ஊர் பொதுமக்கள் தாங்கள் வழங்கக்கூடிய பொருளாதார உதவியை பணமாகவோ பொருளாகவோ கூடிய விரைவில் தாராளமாக தந்து உதவுமாறு கட்டிட கமிட்டியாளர்கள் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அன்போடு அழைப்பது
பெரியப்பள்ளி கட்டிட கமிட்டியாளர்கள்(வக்ஃபு)
முஸ்லீம் ஜமாத் நிர்வாகம்(வக்ஃபு)
கோட்டைப்பட்டினம்

Post a Comment