" நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்" பாகிஸ்தான் பெண்கள் – வைரலாகும் புகைப்படங்கள்



காஷ்மீர் மாநிலம் புல்வா பகுதியில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதலில் 44 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டன தெரிவித்தன.

பாகிஸ்தான் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்து வைரலாகியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர் பாகிஸ்தான் பெண்கள். இதனை பலரும் ஆதரித்தும்,எதிர்த்தும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ஊடகவியலாளர் சஹீர் மிர்சா கூறுகையில்; புல்வாமா தாக்குதல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவிகள் வாழும் காஷ்மீரில் இந்த தாக்குதல் மிகப்பெரிய துயரச்சம்பவமாகும் என வேதனை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க அனைத்து பாகிஸ்தானியர்களும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்ற பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.





போர் என்றைக்கும் தீர்வல்ல என்று தெரிவித்த அவர், மனித நேயத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாகிஸ்தானிய பெண்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் #AntiHateChallenge, #WeStandWithIndia #NoToWar #CondemnPulwamaAttack என்ற ஹேஷ்டாக்குகள் தற்பொழுது பாகிஸ்தான் வட்டார சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Post a Comment